ஹீரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஒ.,
ஹீரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஒ.,
ஹீரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஒ.,
ADDED : செப் 10, 2025 12:26 AM

புதுடில்லி:'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, ஹர்ஷவர்தன் சின்த்தாலே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல், இந்த பொறுப்பை ஏற்பார் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, தலைமை செயல் அதிகாரியாக உள்ள, விக்ரம் கஸ்பெக்கர், இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்ஷவர்தன், உலக அளவில் பல நிறுவனங்களில், 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும், ஐ.டி., சேவை, ஆட்டோமேஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய அனுபவம்கொண்டவர்.