கோவையில் 'புல் மெஷின்ஸ்' ரூ.120 கோடியில் விரிவாக்கம்
கோவையில் 'புல் மெஷின்ஸ்' ரூ.120 கோடியில் விரிவாக்கம்
கோவையில் 'புல் மெஷின்ஸ்' ரூ.120 கோடியில் விரிவாக்கம்
ADDED : மார் 21, 2025 11:26 PM
கோவை; கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'புல் மெஷின்ஸ்' நிறுவனம், கோவையில் உள்ள அதன் ஆலையை 120 கோடி ரூபாய்க்கு விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துஉள்ளது.
இதன் வாயிலாக, தற்போது ஆண்டுக்கு 4,500 இயந்திரங்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனம், அடுத்த நிதியாண்டுக்குள் தனது உற்பத்தி திறனை 9,000 இயந்திரங்களாக இரட்டிப்பாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுவனத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 47 சதவீதமாக உள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.