இலவச 'ஜெட்' சான்றிதழ் பெற 2026 வரை அவகாசம் நீட்டிப்பு
இலவச 'ஜெட்' சான்றிதழ் பெற 2026 வரை அவகாசம் நீட்டிப்பு
இலவச 'ஜெட்' சான்றிதழ் பெற 2026 வரை அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜன 06, 2024 09:57 PM

திருப்பூர்:சுயசார்பு இந்தியாவை உருவாக்கவும், உலகளாவிய தொழில் போட்டியை சமாளிக்கவும், 'பழுதில்லா உற்பத்தி; விளைவில்லா உற்பத்தி' என்ற, 'ஜெட்' சான்றிதழ் வழங்கும் திட்டத்தை, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
குறு, சிறு தொழில்கள், தரச்சான்று பெற, தனியார் அமைப்புகளிடம், அதிக அளவு செலவிட வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில், அரசு மானியத்துடன், ஜெட் சான்றிதழ் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
ஜெட் சான்றிதழ் திட்டத்தில், வெண்கலம், வெள்ளி, தங்கம் என, மூன்று வகை சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இது குறித்து, லகு உத்யோக் பாரதி அமைப்பினர் கூறியதாவது:
உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலை உலகமயமாக்குதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் கூடுதல் மானியம் பெற, மத்திய அரசின், ஜெட் சான்றிதழ் அவசியம்.
உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்து கொண்டால், அரசு மானியத்தில், இலவசமாக ஜெட் சான்றிதழ் கிடைக்கும்.
லகு உத்யோக் பாரதி அமைப்பின் வழிகாட்டுதலுடன், இத்திட்டத்தில் நியமிக்கப்பட்ட அமைப்பினர், நிறுவனங்களை தேடிச்சென்று, ஜெட் சான்றிதழ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இத்திட்டம், 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.