தமிழ்நாட்டில் MSMEகளை இ-காமர்ஸ் மூலம் மேம்படுத்துதல்: உள்ளடக்கிய வளர்ச்சியின் புதிய யுகம்
தமிழ்நாட்டில் MSMEகளை இ-காமர்ஸ் மூலம் மேம்படுத்துதல்: உள்ளடக்கிய வளர்ச்சியின் புதிய யுகம்
தமிழ்நாட்டில் MSMEகளை இ-காமர்ஸ் மூலம் மேம்படுத்துதல்: உள்ளடக்கிய வளர்ச்சியின் புதிய யுகம்

MSMEகள் டிஜிட்டலாக மாறுதல்: தடைகளை உடைத்தல்:
தமிழ்நாட்டின் MSMEகளுக்கு, இ-காமர்ஸ் மூலதனம், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோக வலையமைப்புகளின் நீண்டகால சவால்களை தாண்டுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக அமைந்துள்ளது. டிஜிட்டல் தளங்கள் மூலம், சிறு வணிகங்கள் இப்போது தங்கள் பொருட்களை நேரடியாக நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தி, இடைத்தரகர்களைத் தவிர்த்து, சிறந்த விலையைப் பெறுகின்றன.
உள்ளடக்கிய மற்றும் திறன் மேம்பாடு
![]() |
விவசாய உற்பத்தி அமைப்புகளுடன் ஒத்துழைப்பு:
ஃபிளிப்கார்ட், சமர்த் கிருஷி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு சிறு வேளாண் கூட்டமைப்புடன் இணைந்து, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருப்பூர், அரியலூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOகள்) இ-காமர்ஸ், தரநிலைகள் மற்றும் கொள்முதல் மாதிரிகள் குறித்து பயிற்சி அளித்துள்ளது. இது சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் தேசிய விநியோகச் சங்கிலிகளை அணுக உதவுகின்றன.
சந்தைப்படுத்தல் மற்றும் தொழில் முனைவோருடன் இணைப்பு
தமிழ்நாடு கிராமப்புற இன்குபேட்டர் மற்றும் ஸ்டார்ட்அப் (TN-RISE) உடன் இணைந்து, ஃபிளிப்கார்ட் டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிக்கவும், கிராமப்புற பெண் தொழில் முனைவோரை அதன் தளத்தில் இணைக்கவும் பயிலரங்குகளை நடத்தியுள்ளது.