டாலர் குறியீடு 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு
டாலர் குறியீடு 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு
டாலர் குறியீடு 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு
ADDED : ஜூன் 27, 2025 01:33 AM

நியூயார்க்:அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் செயல்பாடுகள் குறித்து, அந்நாட்டின் அதிபர் டிரம்ப் விமர்சித்ததால், அமெரிக்க டாலர் குறியீடு கடந்த மூன்று மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவராக உள்ள ஜெரோம் பாவெலை மாற்றுவது குறித்து, செப்டம்பர் அல்லது அக்டோபரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட இருப்பதாக செய்தி வெளியானது. இருவருக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு நீடிக்கும் நிலையில், புதிய தலைவரை நியமிக்க டிரம்ப் திட்டமிட்டு உள்ளார்.
இதையடுத்து, விரைவில் வட்டி குறைப்பு தொடர்பாக அறிவிப்பு இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலரை விற்று வருகின்றனர். இதன் காரணமாக, அமெரிக்க டாலர் குறியீடு மூன்று ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு கண்டுள்ளது. ஆறு முக்கிய கரன்சிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு, கடந்த 2022 மார்ச் மாதத்துக்கு பின், முதல்முறையாக 97க்கும் கீழ் குறைந்துள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த சில நாட்களாக வலிமை பெற்று வருகிறது.