நேரடி விமான சேவை இந்தியா - சீனா ஒப்புதல்
நேரடி விமான சேவை இந்தியா - சீனா ஒப்புதல்
நேரடி விமான சேவை இந்தியா - சீனா ஒப்புதல்
ADDED : ஜூன் 13, 2025 10:52 PM

புதுடில்லி:இந்தியாவும், சீனாவும் இரு நாடுகளுக்கு இடையே யான நேரடி விமான போக்குவரத்து சேவையை விரைவாக துவங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சன் வெய்டோங், வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து பேசினார்.
அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான போக்குவரத்து சேவையை விரைவாக மீண்டும் துவங்கவும், இரு தரப்பு உறவுகளை மறுசீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாட்டு மக்களின் நலனை மையமாகக் கொண்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்; ஊடகம் மற்றும் நிபுணர்களுக்கான விசா நடைமுறையை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 2020 முதல் நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.