பேக்கிங், பிராண்டட் அரிசிக்கு ஜி.எஸ்.டி., நீக்க வலியுறுத்தல்
பேக்கிங், பிராண்டட் அரிசிக்கு ஜி.எஸ்.டி., நீக்க வலியுறுத்தல்
பேக்கிங், பிராண்டட் அரிசிக்கு ஜி.எஸ்.டி., நீக்க வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2025 10:36 PM

ஈரோடு : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில், மாநில தலைவர் துளசிமணி, மாவட்ட செயலர் ஷண்முகசுந்தரம் உட்பட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில் கூறியதாவது:
25 கிலோ வரையிலான, முன் கூட்டியே பேக்கிங் செய்த, லேபிள் இட்ட அரிசி மீது, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி உள்ளதால், விலை உயர்ந்து பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். பெரிய நிறுவனங்கள், மொத்தமாக வாங்குவோர் மட்டுமே, 25 கிலோவுக்கு மேல் மூட்டையாக அரிசி வாங்க முடியும். 1, 5, 10, 25 கிலோ பாக்கெட்களை வாங்கும் நடுத்தர மக்கள், ஏழைகள், கிராமப்புற நுகர்வோருக்கு, 5 சதவீத வரியால் விலை உயர்ந்து காணப்படுவதாக உணர்கின்றனர்.
எனவே, அதை நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால், ஜி.எஸ்.டி.,யை தவிர்க்க இயலாமல், பிராண்டட் இல்லாத அரிசியை நுகர்வோர் வாங்குகின்றனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.