Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை சர்வதேச அஞ்சல் தளத்துடன் இணைப்பு

எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை சர்வதேச அஞ்சல் தளத்துடன் இணைப்பு

எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை சர்வதேச அஞ்சல் தளத்துடன் இணைப்பு

எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை சர்வதேச அஞ்சல் தளத்துடன் இணைப்பு

UPDATED : செப் 10, 2025 12:16 AMADDED : செப் 10, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் விதமாக, யு.பி.ஐ., - யு.பி.யு., ஒருங்கிணைப்பு திட்டத்தை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா துபாயில் அறிமுகப்படுத்தினார்.

Image 1467121


இதன் வாயிலாக, நம் நாட்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பான யு.பி.ஐ., சர்வதேச அஞ்சல் ஒன்றிய தளமான யு.பி.யு., உடன் இணைக்கப்பட்டு உள்ளது.



துபாயில் நடைபெற்ற 28வது சர்வதேச அஞ்சல் மாநாட்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அஞ்சல் துறை, என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனம் மற்றும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் இணைந்து இத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.

சர்வதேச அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாகும். அஞ்சல் துறையின் விரிவான கட்டமைப்புடன், யு.பி.ஐ.,யின் விரைவான மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பும் வசதியை ஒருங்கிணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் தெரிவித்ததாவது:

அஞ்சல் துறையின் நம்பகத்தன்மையும், யு.பி.ஐ.,யின் வேகமும் இணைவதால், எல்லைகளுக்கு அப்பால் உள்ள குடும்பங்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும், மிகக் குறைந்த செலவில்பணத்தை அனுப்ப முடியும்.

குறிப்பிட்ட ஒரு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பை, எல்லைகளைக் கடந்து மனிதகுலத்திற்கு சிறப்பாக சேவை செய்ய இணைக்க முடியும் என்பதை இத்திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இணைப்பு, உள்ளடக்கம், நவீனமயமாக்கம், ஒத்துழைப்பு என்ற நான்கு முக்கிய அம்சங்களில் தான் இந்திய அஞ்சல் துறையின் எதிர்கால முன்னேற்றம் அடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்னணு வணிகம் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்களில் கவனம் செலுத்த, சர்வதேச அஞ்சல் ஒன்றியத்துக்கு இந்தியா 88 கோடி ரூபாய் நிதியுதவி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us