காவிரிப்படுகை சுத்திகரிப்பு திட்டம் அரசிடம் சி.பி.சி.எல்., விண்ணப்பம்
காவிரிப்படுகை சுத்திகரிப்பு திட்டம் அரசிடம் சி.பி.சி.எல்., விண்ணப்பம்
காவிரிப்படுகை சுத்திகரிப்பு திட்டம் அரசிடம் சி.பி.சி.எல்., விண்ணப்பம்
ADDED : ஜூன் 05, 2025 12:53 AM

சென்னை:காவிரிப் படுகை சுத்திகரிப்பு திட்டத்துக்கு, தடையின்மை சான்றிதழ் கேட்டு தமிழக அரசிடம், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
நாகப்பட்டினத்தில் கிட்டத்தட்ட 36,400 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு திட்டத்துக்காக, 1,300 ஏக்கர் நிலத்தை சி.பி.சி.எல்., நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
கடந்தாண்டு மார்ச்சில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழு, இத்திட்டத்துக்கான செலவை 29,361 கோடி ரூபாயில் இருந்து, 33,023 கோடி ரூபாயாக உயர்த்த அனுமதி அளித்து இருந்தது.
இது குறித்து சி.பி.சி.எல்., மேலாண் இயக்குநர் ஷங்கர் தெரிவித்ததாவது:
கடந்த 1992ல், நாகப்பட்டினத்தில் 5 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் துவங்கப்பட்டு, 2019ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது.
மிகப்பெரிய அளவிலான காவிரிப் படுகை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக, ஏற்கனவே இருந்த சிறிய சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.
கடந்த 2021ல் புதிய சுத்திகரிப்பு நிலையத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைத்தது. 2023ல் நில எடுப்பு பணிகள் துவங்கி, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
பங்குகள் மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு பதிலளிக்க, கிட்டத்தட்ட 3 -- 4 ஆண்டுகள் பெட்ரோலிய அமைச்சகம் இடைவெளி எடுத்துக் கொண்டதால், திட்டத்துக்கான செலவுகளை மாற்ற, மத்திய அரசு அறிவுறுத்தியது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, தற்போது 36,400 கோடி ரூபாய் ஆகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது