Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஓசூரில் 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' ஒருங்கிணைப்பு அமைப்பு துவக்கம்

ஓசூரில் 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' ஒருங்கிணைப்பு அமைப்பு துவக்கம்

ஓசூரில் 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' ஒருங்கிணைப்பு அமைப்பு துவக்கம்

ஓசூரில் 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' ஒருங்கிணைப்பு அமைப்பு துவக்கம்

ADDED : செப் 22, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
ஓசூர் : பெரு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் ஈடுபடும் 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' என்ற அமைப்பு, தன் கிளையை ஓசூரில் துவக்கியுள்ளது.

தொழில் வளர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், உலகளவில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பகுதியாக மாறி வருகிறது. குறிப்பாக, ஆட்டோமொபைல், உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகள் போன்றவை வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன.

இந்நிலையில், பெரு நிறுவனங்களின் இணைப்பாக, 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' என்ற அமைப்பு, தன் கிளையை ஓசூரில் துவக்கியுள்ளது. மதுரை, சேலம், கோவை, சென்னை ஆகிய நான்கு நகரங்களில், 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' கிளை ஏற்கனவே இயங்கி வருகிறது.

ஓசூரில் கிளை துவங்கிய பின், 'கார்ப்பரேட் கனெக் ஷன்ஸ்' சர்வதேச தலைவரான கனடாவை சேர்ந்த ராபர்ட் கெர்வைஸ் கூறியதாவது:

ஓசூரில் கிளை துவங்கியிருப்பதன் மூலம், தொழில்துறை முன்னோடிகள் உலகளாவிய தொடர்புகளை, இங்கிருந்து ஏற்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஓசூரில் புதிய வாய்ப்புகளை உருவாக்க ஏதுவாகும். இந்நிறுவனம் ஏற்கனவே, 33 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அவர்களின் அனுபவத்தை இங்குள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளவும், இதன் வாயிலாக தொழில்துறை முன்னோடிகள் இணைந்து செயல்படவும் வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us