Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

ADDED : மார் 26, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
சென்னை:தமிழக அரசின், சிட்கோ நிறுவனம் சார்பில், 133.32 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ள அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் பொது வசதி மையங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மேற்கண்ட தொழிற்பேட்டை, பொது வசதி மையங்களை முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

உற்பத்தி மையம்


சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் 57.72 கோடி ரூபாயில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம் மையம்.

தொழிலாளர் விடுதி


கோவை மாவட்டம், குறிச்சி தொழிற்பேட்டையில், 32.38 கோடி ரூபாயில், 618 தொழிலாளர்கள் தங்கும் வகையில், 111 அறைகளுடன் விடுதி

தொழிற்பேட்டைகள்


l திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளையம்

l காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர்

l கடலுார் மாவட்டம், காடாம்புலியூர்

l துாத்துக்குடி மாவட்டம் லிங்கம்பட்டி

l சேலம் மாவட்டம் உமையாள்புரம்.

பொதுவசதி மையங்கள்


l சேலம், தாதகபட்டியில் அச்சு தொழில் குழுமம்

l துாத்துக்குடி கல்மேட்டில் உப்பு தொழில் குழுமம்

l கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் மகளிர் உணவு பொருட்கள் குழுமம்

l கோவை, வெள்ளலுாரில் அச்சு வார்ப்பு குழுமம்

l ஈரோடு, சிட்கோ தொழிற்பேட்டையில் பொது கிடங்கு குழுமம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us