சூ ரை மீன்பிடி தொழிலுக்கு சான்று பெற முயற்சி
சூ ரை மீன்பிடி தொழிலுக்கு சான்று பெற முயற்சி
சூ ரை மீன்பிடி தொழிலுக்கு சான்று பெற முயற்சி
ADDED : செப் 21, 2025 12:28 AM

கொச்சி:கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், சூரை மீன்பிடி தொழிலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற்றுத் தர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொச்சியில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் இதைத் தெரிவித்தார். பழங்கால மீன்பிடி முறைப்படி கைகளால் சூரை மீன் பிடித்தல் லட்சத் தீவுகளில் நடைபெறும் நிலையில், அதற்கு சுற்றுச்சூழல் ஆதரவு சான்றிதழ் பெற்றுத் தருவதன் வாயிலாக, சர்வதேச சந்தையில் அதிக விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.