வீட்டுக்கடன் சுமையை நிர்வகிக்க வழிகாட்டும் முதலீடு உத்தி
வீட்டுக்கடன் சுமையை நிர்வகிக்க வழிகாட்டும் முதலீடு உத்தி
வீட்டுக்கடன் சுமையை நிர்வகிக்க வழிகாட்டும் முதலீடு உத்தி

வட்டி கணக்கு:
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் மாறக்கூடியது. வட்டி விகிதம் 9 சதவீதம் என வைத்துக்கொண்டால், 20 லட்சம் கடனுக்கான மாதத்தவணை 17,000 ரூபாய்க்கு மேல் அமையலாம். கடனுக்கான காலம் 20 ஆண்டுகள் எனில், வட்டியாக மொத்தம் 23 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
பிற வழிகள்:
கடன் சுமையை குறைப்பதற்கான வழிகளில் ஒன்றாக, வட்டி விகிதம் குறையும் போது தவணையை குறைக்காமல் செலுத்தி, கடனுக்கான காலத்தை குறைக்கலாம் என சொல்லப்படுகிறது. இதே போல முன்கூட்டியே அசலில் ஒரு பகுதியை செலுத்தி, வட்டி சுமையை குறைக்கலாம்.
இணை முதலீடு:
கடன் சுமையை குறைப்பதற்கான உத்திகளோடு, இணை முதலீடு உத்தியையும் பரிசீலிக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். மாதத்தவணை தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு நிகரான தொகையை தனியே முதலீடு செய்து வருவதாக இந்த வழி அமைகிறது. உதாரணமாக, 20 சதவீத தொகையை முதலீடு செய்யலாம்.
சீரான முதலீடு:
இணைய முதலீடாக ஒதுக்கும் தொகையை பொருத்தமான மியூச்சுவல் பண்டு திட்டத்தை தேர்வு செய்து சீரான முறையில் முதலீடு செய்யலாம். காலப்போக்கில் இந்த தொகை அதிகரித்து கணிசமாக உருவாகும். கூடுதலாக செலுத்தும் வட்டி தொகையை சமாளிக்க இது உதவும்.
திட்டமிடல்:
மாதத்தவணையுடன் ஒரு தொகையை தனியே சேமிப்பதற்கு தகுந்த திட்டமிடல் தேவை. வீட்டுக்கடன் பெறும் போது, அதற்கான முன்தொகையை திட்டமிட்டு சேமித்து வைப்பது நல்லது என சொல்லப்படுவது போலவே இந்த உத்தி அமைகிறது. கடனை முன்கூட்டி அடைப்பதை திட்டமிடவும் இது உதவும்.