லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க ஒப்பந்தம்
லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க ஒப்பந்தம்
லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க ஒப்பந்தம்
ADDED : மார் 20, 2025 11:39 PM

புதுடில்லி:எதிரி நாட்டு ட்ரோன், ஏவுகணைகளை அழிக்கும் லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க, 142.31 கோடி ரூபாயில், 'பரஸ் டிபென்ஸ்' நிறுவனத்துடன், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது.
இந்த லேசர் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு, குறிவைத்து துல்லியமாக தாக்குவது, எதிரி நாட்டு ரேடார் மற்றும் சென்சார்களை செயல் இழக்கச் செய்வது உள்ளிட்ட நவீன போர் முறைகளை மேற்கொள்ள பயன்படுகிறது.
கடந்த 2009ல் துவங்கப்பட்ட பரஸ் டிபென்ஸ் நிறுவனம், ராணுவ மற்றும் விண்வெளி உபகரணங்கள் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனை செய்வதில் சிறந்து விளங்குகிறது.