3 நாள் சர்வதேச ஆடை கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது
3 நாள் சர்வதேச ஆடை கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது
3 நாள் சர்வதேச ஆடை கண்காட்சி டில்லியில் நாளை துவங்குகிறது
ADDED : ஜூன் 29, 2025 09:01 PM

புதுடில்லி:இந்தியாவின் சர்வதேச ஆடைகள் கண்காட்சி நாளை துவங்கி மூன்று நாட்கள் டில்லியில் நடைபெற உள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் சுதிர் சேக்ரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
உலகளாவிய பிராண்டு நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து தங்களுக்கு தேவையான ஆதாரங்களை படிப்படியாக அதிகரித்து வருவதால், நிலையான உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது.
இதையடுத்து, டில்லி யில் உள்ள யாஷ்பூமி துவாரகா மையத்தில், இந்தியாவின் சர்வதேச ஆடைகள் கண்காட்சி ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் பங்கேற்று பல்வேறு வகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 79 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் துறையினர் பங்கேற்கின்றனர்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை, கண்காட்சியில் காட்சிப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - மே மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 12.80 சதவீதம் அதிகரித்து, 24,480 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.