Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு

விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு

விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு

விழிஞ்ஞம் துறைமுகத்தால் ஏற்றுமதி எளிதாகும் திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்பு

ADDED : ஜூலை 14, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி எளிதாகும் என, ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகம், சர்வதேச கடல் பாதைக்கு மிக அருகே அமைந்துள்ளது. ஆண்டுக்கு, 10 லட்சம் கன்டெய்னர்களை கையாளும் வசதியுடன், துறைமுகம் மூன்று கி.மீ., நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடைகள், கன்டெய்னர் லாரிகளில் துாத்துக்குடி சென்று, அங்கிருந்து சிறிய கப்பலில் கொழும்பு துறைமுகம் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து தான், பெரிய சரக்குக் கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் இருக்கும் சிரமங்கள் குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய சரக்கை, மும்பை துறைமுகம் வரை எடுத்துச் சென்று அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது என, தொழில் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

அனைத்து ஜவுளி ஏற்றுமதி வர்த்தக முகமைகள் கூட்டமைப்பான 'அபாட்' தலைவர் இளங்கோவன் கூறியதாவது:

விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு, பெரிய சரக்குக் கப்பல்கள் நேரடியாக வந்து செல்லும் வசதி உள்ளது. முதன்முறையாக சீனாவின் கன்டெய்னர் கப்பல், சோதனை ஓட்டமாக வந்து சென்றுள்ளது. கடல் பாதையில், கொழும்புக்கு அடுத்ததாக, விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு சரக்குக் கப்பல்கள் செல்லும்.

திருப்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கும், அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லவும் நல்ல சாலை வசதிகள் உண்டு. தொலைவு சற்று அதிகரித்தாலும், விழிஞ்ஞம் துறைமுகம் செல்லும்போது, பல்வேறு சிரமங்கள், நேர விரயம் குறையும்.

இனி, துாத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு சரக்கை மாற்றி, கப்பலில் ஏற்ற வேண்டிய சிரமம் இருக்காது; கால விரயம் தவிர்க்கப்படும். விழிஞ்ஞம் துறைமுகம் முழு பயன்பாட்டுக்கு வரும் போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் முழு அளவில் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us