மறுசுழற்சி தொழில்நுட்பம் திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்
மறுசுழற்சி தொழில்நுட்பம் திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்
மறுசுழற்சி தொழில்நுட்பம் திருப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 01, 2024 12:47 AM

திருப்பூர்,:உலக நாடுகள், 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஜவுளி உற்பத்தியில் மறுசுழற்சி தொழில்நுட்ப பயன்பாடு, அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன.
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய, 2030 முதல், 50 சதவீத மறுசுழற்சி உற்பத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், அதிக கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளன.
ஜவுளி இறக்குமதி செய்யும் இந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, ஐரோப்பாவை சேர்ந்த 'ரிவர்ஸ் ரிசோர்சஸ்' என்ற நிறுவனம், புதிய இணையத்தை உருவாக்கிஉள்ளது. அதன்வாயிலாக மறுசுழற்சி தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த விபரங்கள், டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட உள்ளன.
இதனால், ஒரு நிறுவனத்தில் கொள்முதல் செய்த ஜவுளி கழிவு, எங்கே சென்றது; அதிலிருந்து எத்தனை கிலோ நுால் அல்லது துணி உற்பத்தியானது என்ற விபரத்தை, உறுப்பினர்களோ, ஜவுளி இறக்குமதி நாடுகளோ எளிதாக ஆராய்ந்து பார்க்க முடியும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''ஐரோப்பிய நிறுவனத்தின் இணையத்தில், 20 ஏற்றுமதியாளர்கள் முதல்கட்டமாக இணைந்துள்ளனர். உற்பத்தி வழிமுறை அடிப்படையில், அவற்றுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
''மறுசுழற்சி தொழில்நுட்ப விபரம், டிஜிட்டல் முறையில் ஆவணமாக மாற்றப்படுவது, நீடித்த நிலையான வர்த்தகத்துக்கு கைகொடுக்கும்,'' என்றார்.