'தாராள வர்த்தக ஒப்பந்தம் துவக்கம் தான்; முடிவல்ல'
'தாராள வர்த்தக ஒப்பந்தம் துவக்கம் தான்; முடிவல்ல'
'தாராள வர்த்தக ஒப்பந்தம் துவக்கம் தான்; முடிவல்ல'
ADDED : ஜூலை 24, 2024 11:44 PM

புதுடில்லி:பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக, நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் ஒரு துவக்கம்தான்; முடிவல்ல, என்று தெரிவித்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரிட்டனில் இம்மாதத் துவக்கத்தில் கேர் ஸ்டாமர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்த பிறகு, அந்நாட்டு அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை.
இப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே, கடந்த சில ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில், மீதமுள்ள சிக்கலான விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும், இரு தரப்பு வர்த்தகம், துாய்மை எரிசக்தி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்கள் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று அவர் நொய்டாவில் உள்ள 'எச்.சி.எல்.,டெக்' நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.