ADDED : ஜூலை 03, 2024 11:04 PM

புதுடில்லி:உள்நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக தளமான 'கூ' மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 'எக்ஸ்' என்றழைக்கப்படும் 'டுவிட்டர்' சமூக ஊடக தளத்துக்கு மாற்றாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு சுதேசி சமூக ஊடக தளம், கூ. கடந்த 2021ல், டுவிட்டர் தளம் தொடர்பாக, இந்தியாவில் சில பிரச்னைகள் எழுந்த நிலையில், கூ பிரபலமானது.
பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு துறைகள் இத் தளத்தை ஆதரித்ததை அடுத்து, விரைவில் பிரபலமானது.
வேகமாக வளர்ந்து வந்த சமயத்தில், இந்நிறுவனம் நிதி பிரச்னைகளில் சிக்கியது.
இதையடுத்து, கூ மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.