ஜி.பி.எப்., வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ஜி.பி.எப்., வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ஜி.பி.எப்., வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ADDED : ஜூலை 05, 2024 10:27 PM

புதுடில்லி:நடப்பு செப்டம்பர் காலாண்டுக்கான, ஜி.பி.எப்., எனும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதுபோன்ற இன்னும் சில மத்திய அரசு வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம், 7.10 சதவீதமாகவே தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 - 21ம் நிதியாண்டிலிருந்தே இத்திட்டங்களுக்கான வட்டி விகிதம், 7.10 சதவீதமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1960ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.பி.எப்., திட்டம், அரசு ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும்.