அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,
அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,
அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,
ADDED : ஆக 03, 2024 12:13 AM

மும்பை:தன் கடன் உத்தரவாத பத்திரங்களுக்கான வட்டியை செலுத்துவதற்காக 1,152 கோடி ரூபாயை கடனாக வழங்குமாறு, மத்திய அரசிடம் எம்.டி.என்.எல்., நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல்., 32,000 கோடி ரூபாய் கடனில் தவித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 817 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை படிப்படியாக நிறுத்துவதுடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் ஆக., 10ம் தேதியுடன் முதிர்வடையும் கடன் உத்தரவாத பத்திரங்களுக்கு வட்டி செலுத்த, போதிய நிதியில்லை என, 'செபி' அமைப்பில் எம்.டி.என்.எல்., தெரிவித்து உள்ளது.