தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள கரண் அதானி ஆலோசனை
தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள கரண் அதானி ஆலோசனை
தமிழகத்தில் முதலீடு மேற்கொள்ள கரண் அதானி ஆலோசனை
ADDED : ஜூலை 19, 2024 12:11 AM

சென்னை:தமிழகத்தில், 'ஸ்மார்ட் மீட்டர்' உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பாக, சென்னையில் அரசு உயரதிகாரிகளுடன், அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் கரண் அதானி நேற்று ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைய உள்ளது. இதற்கு, நிலம் எடுப்பு பணி துவங்கியுள்ளது.
டெண்டர்
தமிழக மின் வாரியம், 3.03 கோடி மின் இணைப்புகளில், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்கான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரப்பட்டது.
இந்நிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, கடந்த வாரம் சென்னை வந்தார். அவர், தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, அரசு உயர்மட்டத்தினருடன் ஆலோசனை நடத்தினார்.
ஒப்பந்தம்
அதைத் தொடர்ந்து, அவரது மகன் கரண் அதானி நேற்று சென்னை யில் ஸ்மார்ட் மீட்டர் உள்ளிட்ட பணிகளில் முதலீடு செய்வது குறித்து, அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு ஜனவரி யில், தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், அதானி குழுமம், பசுமை மின் திட்டம் போன்றவற்றில், 42,768 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துஉள்ளது.