மாதாந்திர கார் காப்பீடு பாலிசிபஜார் அறிமுகம்
மாதாந்திர கார் காப்பீடு பாலிசிபஜார் அறிமுகம்
மாதாந்திர கார் காப்பீடு பாலிசிபஜார் அறிமுகம்
ADDED : மார் 13, 2025 11:42 PM

புதுடில்லி:இந்தியாவிலேயே முதன் முறையாக, மாதாந்திர கார் காப்பீடு திட்டத்தை 'பாலிசிபஜார்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் தவணை முறையில் பிரீமியம் செலுத்த அனுமதிக்கப்படுவர். வழக்கமாக கார் காப்பீடுக்கான பிரீமியம் செலுத்தும்போது, ஓர் ஆண்டு அல்லது அதற்கு கூடுதலாகவே செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டு முழுதுக்குமான ஒருங்கிணைந்த காப்பீட்டு தொகையை மாத தவணையாக பிரித்து செலுத்த இது வசதி அளிக்கிறது.
ஆண்டு பிரீமியத்தில், 'நோ கிளைம் போனஸ்' வழங்கப்படும் நிலையில், மாத பிரீமிய திட்டத்தில், தவணை தவறினால், நோ கிளைம் போனஸ் பூஜ்யமாகி, அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் கணக்கிடப்படும்.
ஒருங்கிணைந்த காப்பீடு பாலிசியில், மூன்றாம் நபர் காப்பீடு பிரிவு மட்டும் ஓராண்டுக்கு தொடரக்கூடிய நிலையில், சொந்த சேதத்துக்கான பிரிமீயத்தை மாத தவணையாக செலுத்த அனுமதிக்கப்படும். சொந்த சேதத்துக்கான தனி பாலிசி எடுத்து, மாதத் தவணையில் செலுத்தலாம். மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட மற்ற பிரிவுகளுக்கு தனியாக பாலிசி எடுக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
மாதந்தோறும் தவணை முறையில் பிரீமியம் செலுத்தம் வசதி
ஒவ்வொரு மாதமும் புதுப்பித்தலின் போது புதிய காப்பீட்டு எண்
எளிதாக கட்டணம் செலுத்த யு.பி.ஐ., உள்ளிட்ட வசதிகள்