ADDED : ஜூலை 24, 2024 12:03 AM

உட்கட்மைப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு, வங்கிகளில் உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்கள், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட உதவியாக இருக்கும்.
ஸ்ரீவத்ஸ் ராம்
நிர்வாக இயக்குனர், 'வீல்ஸ் இந்தியா' நிறுவனர்
பட்டியலிட்டப்பட்ட பங்குக்கும், பட்டியலிடப்படாத பங்குக்கும் இடையில் உள்ள வரி விதிப்பு முறையை ஒழித்த இந்த பட்ஜெட், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாகுபாட்டை களைய வேண்டும் என்று தொழில்துறையினர் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்தப் பாகுபாடு நீக்கப்பட்டு இருப்பதால், வரிச் சலுகையை மட்டும் சார்ந்திராமல், தகுதி வாய்ந்த தொழில்களில் முதலீடு செய்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோபால் ஸ்ரீனிவாசன்
தலைவர், டி.வி.எஸ்., கேபிட்டல் பண்ட்ஸ்
----------சீனாவில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தற்போது வேறு நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன.
இந்த சூழலில், பட்ஜெட்டில் நாடு முழுதும், 'பிளக் அண்டு பிளே' எனப்படும், தயார் நிலை தொழிற்கூடங்களை மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த தொழிற்கூடங்களில், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் விரைந்து இந்தியாவில் தொழில் துவங்க முடியும்.
அஜித் குமார் சோர்டியா
நிர்வாக இயக்குனர், ஒலிம்பியா குழுமம்