ஆப்ரிக்க கனிம சுரங்கங்கள் கைப்பற்ற இந்தியா பேச்சு
ஆப்ரிக்க கனிம சுரங்கங்கள் கைப்பற்ற இந்தியா பேச்சு
ஆப்ரிக்க கனிம சுரங்கங்கள் கைப்பற்ற இந்தியா பேச்சு
ADDED : ஜூலை 02, 2024 11:04 PM

புதுடில்லி:முக்கிய கனிம சுரங்கங்களை கைப்பற்றுவது தொடர்பாக ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் போன்ற முக்கிய கனிமங்கள் மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காற்றாலை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் பசுமை எரிசக்தி சார்ந்த முயற்சிகள் அதிகரித்துள்ளதை அடுத்து, இத்தகைய முக்கிய கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய கனிம சுரங்கங்களை கைப்பற்றுவது தொடர்பாக, இந்தியா தற்போது பேச்சு நடத்தி வருகிறது.
அத்துடன், இந்தியாவில் இந்த கனிமங்களை கண்டுபிடிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் அரசு, லித்தியம் சுரங்கம் கண்டறிவதற்கும், தயாரிப்பதற்குமான முயற்சிகளை துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.