இந்தியா - ஜப்பான் முதலீட்டு இலக்கு நிர்ணயம்
இந்தியா - ஜப்பான் முதலீட்டு இலக்கு நிர்ணயம்
இந்தியா - ஜப்பான் முதலீட்டு இலக்கு நிர்ணயம்
ADDED : ஜூலை 31, 2024 01:42 AM

டோக்கியோ: இந்தியாவும், ஜப்பானும் 2027ம் ஆண்டுக்குள், 3.50 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டு இலக்காக நிர்ணயித்து உள்ளதாக, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற 'குவாட்' அமைப்பின் கூட்டத்தில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் எட்டு விமான நிலையங்களைக் கட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு நகரங்களில், இரண்டு புதிய மெட்ரோ அமைப்புகளை ஏற்படுத்தி உள்ளோம்.
நாளொன்றுக்கு 28 கி.மீ., தொலைவுக்கு சாலை மற்றும் 8 கி.மீ., ரயில் பாதையை அமைத்து வருகிறோம். கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி உள்ளது. ஏற்றுமதி வாயிலாக இந்தியா, ஆண்டுக்கு 8.30 லட்சம் கோடி ரூபாயை ஈட்டி வருகிறது.
தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 1,400 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.