'ஹவுஸ்புல்' ஆனது 'சிட்கோ' தண்டரை தொழிற்பேட்டை
'ஹவுஸ்புல்' ஆனது 'சிட்கோ' தண்டரை தொழிற்பேட்டை
'ஹவுஸ்புல்' ஆனது 'சிட்கோ' தண்டரை தொழிற்பேட்டை
ADDED : ஜூன் 07, 2024 02:30 AM

சென்னை: தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், தண்டரையில், 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல் பார்க்' எனப்படும் தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தொழிற்பேட்டையை அமைத்துள்ளது.
பஸ் சீட் கவர், மருத்துவ கையுறை, முக கவசம் தயாரிப்பது உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு, அங்குள்ள தொழில்மனைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாசு ஏற்படுத்தாத வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் மனைகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அனைத்து மனைகளும் ஒதுக்கப்பட்டு ஹவுஸ்புல் ஆகிவிட்டன.
இதுகுறித்து, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத நிறுவனங்கள் தொழில் துவங்கும் வகையில், தண்டரை தொழிற்பேட்டையானது, 44 ஏக்கரில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, மொத்தம் 110 தொழில் மனைகள் உள்ளன.
இங்கு தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களே தொழில் துவங்கி உள்ளன. எனவே, தண்டரை தொழிற்பேட்டையில், பிற தொழில் நிறுவனங்களும் தொழில் துவங்கும் வகையில், பொதுப் பிரிவுக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.
தற்போது, மாசு ஏற்படுத்தாத தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு, அனைத்து தொழில்மனைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.