இந்திய முதியவர்களின் நிதி பாதுகாப்பு கவலை
இந்திய முதியவர்களின் நிதி பாதுகாப்பு கவலை
இந்திய முதியவர்களின் நிதி பாதுகாப்பு கவலை
ADDED : ஜூன் 17, 2024 12:54 AM

இந்தியாவில் உள்ள வயதானவர்களில் குறைந்த அளவிலானவர்களே ஓய்வூதிய பாதுகாப்பு பெற்றிருப்பதும், கணிசமான முதியவர்கள் நிதி பாதுகாப்பு கவலை கொண்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'ஹெல்ப் ஏஜ்' எனும் தொண்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில், 20க்கும் மேற்பட்ட நகரங்களில், 5,000த்திற்கும் மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் 1,000த்திற்கும் மேற்பட்ட வயதானவர்களை பராமரிப்பவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
ஓய்வூதியம் அல்லது சேமநல நிதி போன்ற பாதுகாப்பை 29 சதவீத பங்கேற்பாளர்கள் மட்டுமே பெற்றிருப்பது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே அளவிலான முதியவர்களுக்கு வீட்டில் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து உதவி கிடைக்கிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 65 சதவீதம் பேர், வயதான காலத்தில் நிதி பாதுகாப்பின்மை கவலையை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் முதியவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னையாக உள்ளது.
மருத்துவ உதவி பெறுவது பலருக்கு சவாலாக உள்ளது. வயதானவர்களில் 31 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.