Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'டிட்கோ'வின் பிரமாண்ட தொழில் பூங்கா: முன்னணி தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

'டிட்கோ'வின் பிரமாண்ட தொழில் பூங்கா: முன்னணி தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

'டிட்கோ'வின் பிரமாண்ட தொழில் பூங்கா: முன்னணி தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

'டிட்கோ'வின் பிரமாண்ட தொழில் பூங்கா: முன்னணி தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

ADDED : ஜூன் 04, 2024 06:50 AM


Google News
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில், பசுமை மின் சாதனங்கள் உற்பத்தி உட்பட பல தொழில்களுக்கான கனரக தொழில் பூங்காவை, 'டிட்கோ' உடன் இணைந்து அமைக்க, பல முன்னணி தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. எனவே, அந்த பூங்காவுக்கு, அதிக விலைப் புள்ளி கிடைக்க, ஏல அடிப்படையில் ஒதுக்க டிட்கோ முடிவு செய்துள்ளது.

கனரக தொழில் பூங்கா


தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு தொழில் பூங்கா, தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் உள்ள காட்டூர், எப்ரஹாம்புரம் கிராமங்களில், 655 ஏக்கரில் கனரக இன்ஜினியரிங் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இந்த பூங்கா, உலகத்தர உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. அவை சூரியசக்தி மின் தகடு, காற்றாலை டர்பைன் தயாரிப்பு, கனரக வாகனங்களுக்கான இயந்திரங்கள் தயாரிப்பு, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கனரக தொழில் பூங்கா அமைய உள்ள இடம், சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று துறைமுகங்களுக்கு அருகில் உள்ளது. இந்த பூங்கா வாயிலாக, 3,000 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 50,000 நபருக்கு வேலை கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

டிட்கோ ஆயத்தம்


இங்கு பல முன்னணி தொழில் நிறுவனங்கள், பூங்கா அமைக்க ஆர்வம் காட்டிவருகின்றன.

எனவே, பூங்கா ஒதுக்கீட்டால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், ஏல டெண்டர் கோரி, அதிக தொகை ஏலம் கேட்கும் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்து, அதனுடன் இணைந்து, கனரக பூங்கா அமைக்க டிட்கோ ஆயத்தமாகி வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us