ADDED : ஜூன் 25, 2024 10:11 PM

மும்பை ; நடப்பாண்டு மார்ச் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு உபரி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.60 சதவீதமாக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மதிப்பு அடிப்படையில் இது 47,300 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 10,800 கோடி ரூபாயாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக கடந்த நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் 5.56 லட்சம் கோடி ரூபாயாக இருந் தது குறிப்பிடத்தக்கது.