சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வாழ்த்து
சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வாழ்த்து
சிறு தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வாழ்த்து
ADDED : ஜூன் 28, 2024 02:29 AM

சென்னை:'சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளையொட்டி, அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை:
நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்; பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் துவங்க புத்தொழில் நிதி; சந்தைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள்.
தமிழ்நாடு தென்னை நார் கொள்கை - 2024; தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை - 2023 உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதிலும் தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரும்பங்காற்றத் தேவையான ஊக்குவிப்பையும், உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்பரசன் வாழ்த்து
தமிழகத்திலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில், 62 லட்சம் நிறுவனங்கள் உள்ளன. அவை, வாகன உதிரிபாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
இந்நிறுவனங்கள் வாயிலாக, ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நிறுவனங்களுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை அளிப்பதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அந்நிறுவனங்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் என் வாழ்த்துகள்' என, கூறப்பட்டுள்ளது.