ஸ்டார்ட் அப்களுக்கு 'இன்குபேட்டர்' கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு
ஸ்டார்ட் அப்களுக்கு 'இன்குபேட்டர்' கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு
ஸ்டார்ட் அப்களுக்கு 'இன்குபேட்டர்' கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 01, 2024 07:06 AM
புதுடில்லி : ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இன்குபேட்டர்கள் எனும் தொழில் வளர்ப்பகங்களை அமைக்குமாறு, பெரிய நிறுவனங்களையும், யுனிகார்ன் நிறுவனங்களையும் மத்திய அரசு வலியுறுத்திஉள்ளது.
இதுகுறித்து டி.பி.ஐ.ஐ.டி., எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை, 'ஆப்பிள், டாடா குழுமம், ஹூண்டாய், ஸ்கோடா, மாருதி' உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை -அணுகி உள்ளது.
மேலும், போட், மோக்லிக்ஸ், மீஷோ மற்றும் ஈஸ்மைட்ரிப் போன்ற யுனிகார்ன் நிறுவனங்களையும் அணுகி, அழைப்பு விடுத்துள்ளது.
இந்த இன்குபேட்டர்களை உருவாக்குவது குறித்த வரைவு திட்டத்தை வழங்கும் நிறுவனங்கள், இதற்கான நிதியுதவியையும் அரசிடம் இருந்து பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமின்றி, 'அமேசான், நைக், சாம்சங், பி.எம்.டபிள்யு., அஸ்ட்ராஜெனிகா, ஸ்பாட்டிபை' உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.