பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு
பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு
பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு
ADDED : ஜூன் 20, 2024 10:33 PM

சென்னை:பி.எஸ்.என்.எல்., வணிக இயக்குனராக, சென்னை டெலிகாம் பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பி.எஸ்.என்.எல்., சென்னை டெலிகாம் தலைமை பொது மேலாளராக சுதாகர ராவ் பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி, முதன்மை அதிகாரிகளை தேர்வு செய்யும் பி.இ.எஸ்.பி., தேர்வுக் குழு கூட்டம் நடந்தது.
இதில், இயக்குனராக தகுதி உள்ள 11 பேரின் பெயர்கள் இடம் பெற்றன.
வணிக இயக்குனராக சுதாகர ராவ் தேர்வு செய்யப்பட்டார். வணிகப் பிரிவு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கையாள்வது, விற்பனை போன்ற பொறுப்புகளும், வணிக இயக்குனரின் கீழ் வருகின்றன.
இவர், அடுத்த மாதம் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.