வாகன உதிரிபாக விற்பனை 10 சதவீதம் உயர்வு
வாகன உதிரிபாக விற்பனை 10 சதவீதம் உயர்வு
வாகன உதிரிபாக விற்பனை 10 சதவீதம் உயர்வு
ADDED : ஜூலை 26, 2024 12:48 AM

புதுடில்லி:இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களின் மொத்த விற்பனை, கடந்த நிதியாண்டில் 9.80 சதவீதம் உயர்ந்து, 6.14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக வாகன உதிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உதிரிபாகங்கள் 8.90 சதவீதம் உயர்ந்து, அதன் மதிப்பு 5.18 லட்சம் ரூபாயாக உள்ளது. மொத்த உதிரிபாக தயாரிப்பில், மின்சார வாகன சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள உதிரிபாகங்கள் மட்டும் 6 சதவீதமாக வளர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் உதிரிபாக ஏற்றுமதி 5.5 சதவீதமாக அதிகரித்து, 1.78 லட்சம் கோடி ரூபாயாகவும், அதன் இறக்குமதி 3 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 1.75 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. இதனால், வர்த்தக உபரி 2,513 கோடி ரூபாயாக உள்ளது.
வாகனத்துறை வளர்ச்சியின் காரணமாக, வாகன உதிரிபாக உற்பத்தி துறையின் பெரும்பாலான பிரிவுகள், கொரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வலுவான பொருளாதார வளர்ச்சி, வாகனத் துறைக்கு சாதகமான கொள்கைகள் உள்ளிட்டவை, வாகன உதிரிபாகத் துறையின் வளர்ச்சியை இந்த நிதியாண்டில் உறுதிப்படுத்தும் என, வாகன உதிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.