Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/சரிவு பாதையில் 'இ-ருபி' பயன்பாடு

சரிவு பாதையில் 'இ-ருபி' பயன்பாடு

சரிவு பாதையில் 'இ-ருபி' பயன்பாடு

சரிவு பாதையில் 'இ-ருபி' பயன்பாடு

ADDED : ஜூன் 25, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி : ரிசர்வ் வங்கி, சோதனை முறையில் அறிமுகப்படுத்திய, 'இ--ருபி'யின் பயன்பாடு, அதன் ஆரம்பகட்ட இலக்கை அடைந்த நிலையில், தற்போது சரியத் துவங்கியுள்ளது.

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பணத்தின் புழக்கத்தை குறைக்கும் நோக்கில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிசர்வ் வங்கி சோதனை முறையில், இ-ருபியை அறிமுகப்படுத்தியது.

இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு, 10 லட்சம் பணப் பரிமாற்றங்கள் நடைபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இலக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் எட்டப்பட்டது.

இதனை பயன்படுத்தும் சில்லரை வர்த்தகர்களுக்கு, வங்கிகள் ஊக்கத்தொகை வழங்கியதாலும்; வங்கிப் பணியாளர்களுக்கான ஊதியம் இதன் வாயிலாக வழங்கப்பட்டதாலுமே இந்த இலக்கு எட்டப்பட்டது.

இந்நிலையில், இ-ருபியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, இதன் பயன்பாடு, தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பரிமாற்றங்களாக குறைந்துள்ளது. இ-ருபிக்கான யதார்த்த தேவை இல்லாததையே இது வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைக்கு இந்த சோதனை திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இத்திட்டத்தின் பயன்பாடு குறித்து அறியவும், புதிய பயன்பாடுகளை உருவாக்குவதிலுமே கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வாறு உருவாக்கப்படும்பட்சத்தில், இ- ருபியின் பயன்பாடும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

உலகளவில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள், பணப்புழக்கத்தை குறைக்கும் நோக்கில், சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பெரும்பாலும், அனைத்து நாடுகளிலுமே இதன் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us