ரூ.25,000 கோடியில் ராணுவ பொருட்கள் தயாரிப்பு
ரூ.25,000 கோடியில் ராணுவ பொருட்கள் தயாரிப்பு
ரூ.25,000 கோடியில் ராணுவ பொருட்கள் தயாரிப்பு
ADDED : ஜூலை 09, 2024 06:56 AM

புதுடில்லி : ராணுவம் தொடர்பான தயாரிப்புகளை மேற்கொள்ள, 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான 154 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது உத்தர பிரதேச அரசு. இந்த ராணுவ தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முனைப்பு காட்டி வருகிறது.
உத்தர பிரதேச பாதுகாப்பு தொழில்துறை ஆணையம், 'அதானி டிபென்ஸ் அண்டு ஏரோஸ்பேஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பிரமோஸ் ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட 42க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாவது: லக்னோ, கான்பூர், ஜான்சி, அலிகர், சித்ரகூட் மற்றும் ஆக்ரா ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியதாக உத்தர பிரதேச ராணுவ தொழில்துறை வழித்தடம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது, 154 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், 85 ஒப்பந்தங்கள் பேச்சில் உள்ளன. இதனால், 40,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.