வங்கிக்கு திரும்பாத ரூ.2000 நோட்டுகள்
வங்கிக்கு திரும்பாத ரூ.2000 நோட்டுகள்
வங்கிக்கு திரும்பாத ரூ.2000 நோட்டுகள்
ADDED : ஜூன் 04, 2024 06:57 AM

மும்பை : திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில் 97.82 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது-.
இதுகுறித்து ஆர்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: இதுவரை 2000 ரூபாய் நோட்டுகளில் 97.82 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளன. 7,755 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் இன்னும் உள்ளன. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி, நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதைப் பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதன் மதிப்பிலான தொகையை தங்களது வங்கி கணக்கில் வரவு செய்து கொள்ளலாம் அல்லது அதற்குரிய மதிப்பிலான பிற நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.