/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள் வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள்
வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள்
வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள்
வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டுகள்
ADDED : மே 18, 2025 01:26 AM

புதுடில்லி:சில்லரை தட்டுப்பாட்டை குறைக்கும் நடவடிக்கையாக, புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெற்றுள்ள, மஹாத்மா காந்தியின் புகைப்படத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
புதிய நோட்டின் வடிவமைப்பானது, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டு போன்றே இருக்கும். இதற்கு முன்னர், ரிசர்வ் வங்கியால் வெளியிட்ட அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.