/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வணிகர்களுக்கு யு.பி.ஐ., பேமென்ட் தினசரி ரூ.10 லட்சம் வரை அனுமதி வரம்பை உயர்த்தியது என்.பி.சி.ஐ., வணிகர்களுக்கு யு.பி.ஐ., பேமென்ட் தினசரி ரூ.10 லட்சம் வரை அனுமதி வரம்பை உயர்த்தியது என்.பி.சி.ஐ.,
வணிகர்களுக்கு யு.பி.ஐ., பேமென்ட் தினசரி ரூ.10 லட்சம் வரை அனுமதி வரம்பை உயர்த்தியது என்.பி.சி.ஐ.,
வணிகர்களுக்கு யு.பி.ஐ., பேமென்ட் தினசரி ரூ.10 லட்சம் வரை அனுமதி வரம்பை உயர்த்தியது என்.பி.சி.ஐ.,
வணிகர்களுக்கு யு.பி.ஐ., பேமென்ட் தினசரி ரூ.10 லட்சம் வரை அனுமதி வரம்பை உயர்த்தியது என்.பி.சி.ஐ.,
ADDED : செப் 15, 2025 11:57 PM

புதுடில்லி : நுகர்வோர், குறிப்பிட்ட சில பிரிவுகளில் இயங்கும் வணிகர்களுக்கு மேற்கொள்ளும் தினசரி யு.பி.ஐ., பரிவர்த்தனை வரம்பு 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக, என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது. எனினும், தனிநபரிடம் இருந்து வணிகருக்கான பி 2 எம் பரிவர்த்தனைக்கு மட்டுமே இது பொருந்தும், பி 2 பி எனப்படும் தனி நபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனை வரம்பு ஒரு லட்சம் ரூபாயாகவே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதற்காக நுகர்வோர் எந்த ஒரு அப்டேட்டும் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் தொடர்பு கொள்ளும் வணிகர்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், உயர்த்தப்பட்டுள்ள வரம்பின் கீழ் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.