/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/எல்.ஐ.சி., வணிகம் 94 சதவீதம் உயர்வுஎல்.ஐ.சி., வணிகம் 94 சதவீதம் உயர்வு
எல்.ஐ.சி., வணிகம் 94 சதவீதம் உயர்வு
எல்.ஐ.சி., வணிகம் 94 சதவீதம் உயர்வு
எல்.ஐ.சி., வணிகம் 94 சதவீதம் உயர்வு
ADDED : ஜன 12, 2024 11:59 PM

மும்பை:கடந்த டிசம்பரில், எல்.ஐ.சி.,யின் ஒற்றை பிரீமியத்திற்கான வர்த்தகத்தில் 194 சதவீதம் வளர்ச்சி கண்டு, மொத்த வணிகத்தில் 94 சதவீதம் உயர்வைக் கண்டது.
எல்.ஐ.சி.,யின் மொத்த பிரீமியம், முந்தைய ஆண்டின் 11,859 கோடி ரூபாயில் இருந்து, நடப்பாண்டு டிசம்பரில் 22,981 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில் ஒற்றை பிரீமியம், 17,601 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 5,966 கோடி ரூபாயாக இருந்தது.
வழக்கமான பிரீமியத்தைவிட, ஒற்றை பிரீமியம் பொதுவாக ஒரே நேரத்தில் பெறப்படும்.
கடந்த டிசம்பரில், எல்.ஐ.சி.,யின் வணிகம் எழுச்சியடைந்து, முந்தைய ஆண்டு டிசம்பரின் பிரீமியம் தொகையான 26,838 கோடி ரூபாயில் இருந்து, கடந்த டிசம்பரில் 38,583 கோடி ரூபாயாக அதிகரித்து, 43 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.