/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை 33 சதவிகிதம் அதிகரிப்பு பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை 33 சதவிகிதம் அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை 33 சதவிகிதம் அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை 33 சதவிகிதம் அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை 33 சதவிகிதம் அதிகரிப்பு
ADDED : மார் 23, 2025 09:31 PM

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளின் ஈவுத்தொகை செலுத்துதல், கடந்த நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்து 27,830 கோடியாக உயர்ந்துஉள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை வங்கிகளின் ஈவுத் தொகை செலுத்துதல் கடந்த 2024ம் நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்து 27,830 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அரசு தரவுகளின்படி, கடந்த 2023 - 24ம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக 27,830 கோடி ரூபாயை பொதுத்துறை வங்கிகள் பங்குதாரர்களுக்கு அறிவித்தன.
இது முந்தைய ஆண்டின் 20,964 கோடி ரூபாயைக் காட்டிலும் 32.7 சதவீதம் அதிகமாகும்.
மொத்த ஈவுத் தொகையான 27,830 கோடி ரூபாயில் கிட்டத் தட்ட 65 சதவீதம் அதாவது 18,013 கோடி ரூபாயை கடந்த நிதியாண்டின் பங்குத் தொகையாக அரசுக்கு பொதுத்துறை வங்கிகள் செலுத்தியுள்ளன.
கடந்த நிதியாண்டில் ஈட்டப்பட்ட 1.41 லட்சம் கோடி ரூபாய் லாபத்தில், எஸ்.பி.ஐ., வங்கியின் பங்கு 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் ஈட்டிய 1.05 லட்சம் கோடி ரூபாய் நிகர லாபத்தை விட, 2023 -24ம் நிதியாண்டில் 12 பொதுத்துறை வங்கிகளும், 1.41 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்து உள்ளன.
மேலும் நடப்பு நிதியாண்டில் ஒன்பது மாதங்களில் 1.29 லட்சம் கோடி ரூபாயை ஈட்டிஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் நிதியாண்டில், 85,390 கோடி ரூபாய் நஷ்டத்தில் சாதனை அளவாக இருந்த நிலையில், 2024ம் நிதியாண்டில் லாபத்தில் வங்கிகள் சாதனை படைத்திருப்பது திருப்புமுனையாக அமைந்துஉள்ளது.
இது பொதுத்துறை வங்கிகளின் வலுவான செயல் திறனை பிரதிபலிப்பதுடன், அவர்களின் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.