Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு முதல்வர் ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு முதல்வர் ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு முதல்வர் ஸ்டாலின் தகவல்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு முதல்வர் ஸ்டாலின் தகவல்

ADDED : செப் 08, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
சென்னை : தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து கடந்த மாதம் 30ம் தேதி சென்றார். அவர் தன் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:

ஜெர்மனி, பிரிட்டன் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. மொத்தம், 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வாயிலாக, 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. 10 புதிய நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முன்வந்துஉள்ளன.

உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் ஆறு அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் 17 நிறுவனங்களும், மற்ற மாநிலங்களை நோக்கி செல்லாமல், நம் மாநிலத்திலேயே தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துஉள்ளன.

ஓசூரில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, 'டெல்டா எலக்ட்ரானிக்ஸ்' தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடத்தையும் வரும் செப்., 11ம் தேதி திறந்துவைத்து, 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன்.

துாத்துக்குடியில் நடத்தியது போல, ஓசூரிலும் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தப் போகிறோம். அங்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us