ADDED : பிப் 06, 2024 10:36 AM
புதுடில்லி:கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஜி.எஸ்.டி., ஏய்ப்பு செய்துள்ளதாக 14,597 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ஜி.எஸ்.டி., ஏய்ப்பு தொடர்பாக 14,597 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 2,716 வழக்குகளும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 2,589 வழக்குகளும், ஹரியானாவில் 1,123 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1,098 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான, போலி வரி உள்ளீட்டு பயன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கு மூளையாக செயல்பட்ட 98 பேரை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.