/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ எஸ்.பி.ஐ., வட்டி மீண்டும் உயர்வு எஸ்.பி.ஐ., வட்டி மீண்டும் உயர்வு
ADDED : ஜூலை 16, 2024 10:45 AM

புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளது.
இதையடுத்து, வீடு, வாகனம் உள்ளிட்ட நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே எஸ்.பி.ஐ., கடந்த ஜூன் மாதம் இதே போன்று வட்டி விகிதத்தை, 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
'ரெப்போ' வட்டி விகிதத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை, வங்கிகள் உடனே அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
வங்கிகள் எம்.சி.எல்.ஆர்., விகிதத்துக்கு குறைவாக வட்டி வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக, ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள், லாபம் என பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வங்கியும் அவ்வப்போது எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை மாற்றி அமைக்கின்றன.
இதன்படி, ஓராண்டுக் கான வட்டி விகிதம் தற்போதுள்ள 8.75 சதவீதத்தில் இருந்து, 8.85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.