Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆர்.பி.ஐ., ஹேக்கத்தான் விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூன் 13, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
மும்பை:ரிசர்வ் வங்கி நடத்தவுள்ள மூன்றாவது உலக ஹேக்கத்தான் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஹார்பிங்கர் 2024 - இன்னோவேஷன் பார் டிரான்ஸ்பர்மேஷன்' என்ற தலைப்பில் நடத்தப்பட உள்ள இந்த போட்டி, இரண்டு முக்கிய கருப்பொருட்களைக் கொண்டுள்ளது. நிதி மோசடிகள் அற்ற சூழலை உருவாக்குவது; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது ஆகியவை நோக்கம்.

பங்கேற்பதற்கு வரும் ஜூலை மாதம் 19ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வெற்றி பெறும் நபர் அல்லது குழுக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us