/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ ரூ.40 லட்சம் கடன் 'தாய்கோ' வங்கி முடிவு ரூ.40 லட்சம் கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
ரூ.40 லட்சம் கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
ரூ.40 லட்சம் கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
ரூ.40 லட்சம் கடன் 'தாய்கோ' வங்கி முடிவு
ADDED : ஜூலை 16, 2024 10:37 AM

சென்னை: தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ், 'தாய்கோ' எனப்படும், தமிழக தொழிற்கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இதற்கு மாநிலம் முழுதும், 47 கிளைகள் உள்ளன.
இந்த வங்கி, தொழில் நிறுவனங்களுக்கு, 'சிட்கோ' தொழிற்பேட்டையில் தொழில்மனைகள் வாங்குவது உட்பட பல்வேறு தேவைகளுக்கு கடன்களை வழங்குகிறது.
தற்போது குறுந்தொழில்களுக்கு, 10 சதவீத வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “தாய்கோ வங்கியில் வழங்கப்படும் கடன் அளவை அதிகரிக்குமாறு தொழில்முனைவோர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. எனவே, 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடனை, 40 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.