
500 கோடி வசூலைக் கடந்த சாயாரா
இந்தியாவில் மொத்த வசூலாக 376 கோடி, (நிகர வசூல் 308 கோடி), வெளிநாடுகளில் மொத்த வசூலாக 131 கோடி என மொத்தம் 507 கோடியை வசூலித்துள்ளது. இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு காதல் திரைப்படம் இந்த அளவிற்கு வசூலித்துள்ளது இதுவே முதல் முறை.
2025ல் வெளியான இந்தியத் திரைப்படங்களில் "சாவா" ஹிந்திப் படம் சுமார் 800 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 507 கோடியுடன் "சாயாரா" இரண்டாவது இடத்தில் உள்ளது.
500 கோடி வசூலைக் கடந்த இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூலைக் கடந்த படங்களில் தற்போது 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுமார் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் பத்து மடங்கு அதிக வசூலைக் கொடுத்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!