/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மரக்கிளை விழுந்து படுகாயம் கோமா நிலையில் இளைஞர் மரக்கிளை விழுந்து படுகாயம் கோமா நிலையில் இளைஞர்
மரக்கிளை விழுந்து படுகாயம் கோமா நிலையில் இளைஞர்
மரக்கிளை விழுந்து படுகாயம் கோமா நிலையில் இளைஞர்
மரக்கிளை விழுந்து படுகாயம் கோமா நிலையில் இளைஞர்
ADDED : ஜூன் 18, 2025 11:03 PM

பெங்களூரு:காய்ந்த மரக்கிளை விழுந்து படுகாயமடைந்த இளைஞர், கோமா நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.
பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் அக் ஷய், 29. இம்மாதம் 15ம் தேதி, தன் தந்தையின் பிறந்த நாளையொட்டி, ஆட்டு இறைச்சி வாங்குவதற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
பிரம்ம சைதன்யா கோவில் அருகில் சென்றபோது, காய்ந்த மரக்கிளை ஒன்று, அக் ஷய் தலைமீது விழுந்தது. நிலை தடுமாறிய அவர், வாகனத்துடன் கீழே விழுந்தார்.
இதை பார்த்த அப்பகுதியினர், அவரை உடனடியாக ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பத்து இடங்களில் மண்டை ஓட்டில் விரிசல் இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். அன்றைய தினம் அவருக்கு மூன்று மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தகவல் அறிந்து வந்த கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரி, 'இளைஞரின் மருத்துவ செலவை, ஆணையமே ஏற்றுக் கொள்ளும்' என தெரிவித்தார்.
இளைஞரின் உடல் நிலை குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீதட் கூறுகையில், ''மரக்கிளை விழுந்ததில், அவரின் மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவரின் உடல்நிலை மோசமாக உள்ளது. உறுப்புகள் வேலை செய்வதற்கு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது. கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ரத்தம் கசிவதை தடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.