ADDED : மே 24, 2025 04:47 AM

தங்கவயல்:மாரிகுப்பம் ஸ்மித் சாலை, ஆர்.டி. பிளாக் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் 25 வயது பெண் ஒருவர் பலியானார்.
தங்கவயல், மாரிகுப்பம் பகுதியில் ஸ்மித் ரோடு பங்களாவின் அவுட் ஹவுஸில் வசித்து வந்தவர் கிரேசி, 25. இவர் கணவரை பிரிந்து, 2 வயது பெண் குழந்தையுடன் இருந்தார்.
தன் உடைகளை துவைத்து கம்பியில் உலர வைத்திருந்தார். நேற்று மாலையில், அதனை எடுக்க சென்ற போது, பட்டு போன தைல மரம் ஒன்று வேருடன் அவர் மீது விழுந்தது.
இதில் அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தங்கவயல் நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, வார்டு கவுன்சிலர் சாந்தி அன்பு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 'பட்டு போன மரங்கள் அனைத்தையும் அகற்ற நடவடிக்கை எடுப்போம்' என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.