Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கும் இளம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கும் இளம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கும் இளம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கும் இளம் காங்., - எம்.எல்.ஏ.,க்கள்

ADDED : மே 20, 2025 11:23 PM


Google News
சத்தமே இன்றி அமைச்சர் பதவிக்கு, இளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முயற்சித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால், மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவியை எதிர்நோக்கி உள்ளனர். அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

மாகடி பாலகிருஷ்ணா, அரிசிகெரே சிவலிங்கேகவுடா, மலவள்ளி நரேந்திரசாமி, இண்டி யஷ்வந்தராய கவுடா பாட்டீல், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, அதானி லட்சுமண் சவதி உள்ளிட்ட சில மூத்த எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டு விட்டனர்.

இந்நிலையில் புதுமுக, இளம் எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி மீது ஆசை துளிர்விட்டு உள்ளது. சிக்கபல்லாபூர் பிரதீப் ஈஸ்வர், பல்லாரி பரத் ரெட்டி, கம்ப்ளி கணேஷ், சென்னகிரி பசவராஜ் சிவகங்கா உள்ளிட்டோரும் தங்களுக்கு தெரிந்த, மேலிட தலைவர்களிடம் பேசி அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்து வருகின்றனர்.

இவர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்களாக உள்ள எம்.எல்.ஏ.,க்களான பசனகவுடா தத்தல், பசனகவுடா துருவிஹால், ரங்கநாத், சரத் பச்சேகவுடா உட்பட சிலரும் அமைச்சர் பதவிக்கு முயற்சித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க எம்.எல்.சி.,க்கள் சிலரும் இம்முறை எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்கியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us